07/11/2020
தேர் திருவிழா உட்பட முதல் 3 நாள் (விநாயகர், துர்க்கை, பிடாரி)+10 நாள் பஞ்ச மூர்த்திகள் மாடவீதி உலா (தீபத்திருவிழா) + 3 நாள் ( தெப்பம் ) + 1 நாள் சண்டிகேஸ்வரர் மாடவீதி உலா நடைபெறாது. 17 நாட்கள் மாடவீதி உலா செல்வதற்கு தடை தொடரும்.
ஆயினும் கோயிலின் உட்பிரகாரத்தில் உற்சவ மூர்த்திகள் வலம் வருவர். வழக்கம் போல் அனைத்து ஆராதனைகளும் நடைபெறும். பரணி தீபம் மற்றும் மகாதீபம் ஏற்றப்படும். கவலை தேவையில்லை.
நம் பஞ்ச மூர்த்திகளின் இந்த திருவிழா கால அலங்கார வீதிஉலாவை காணவே கண் கோடி போதாது. இந்த ஆண்டு வரலாற்றிலேயே முதல்முறையாக மாடவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவல் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் சற்றே சமூக பாதுகாப்பை இந்த இக்கட்டான கொரோனா தொற்று காலத்தில் உறுதி படுத்தும் விதத்தில் திருக்கோயில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இந்த முடிவினை எடுத்திருப்பார்கள் என நம்புகின்றோம்.
வீட்டில் இருந்தே தீபம் ஏற்றி இறைவனை மனமார வேண்டி சமூக இடைவெளியினை கடைபிடிப்போமாக. 🙏🏼