10/06/2025
ரயில்வே தட்கல் டிக்கெட் திட்டத்தில் புதிய மாற்றங்கள் - ஆதார் கட்டாயம் - 01 ஜூலை 2025 முதல் அமல்!
தமிழ்நாடு புகையிரத செய்திகள்- तमिलनाडु रेलवे समाचार- 𝕿𝖆𝖒𝖎𝖑𝖓𝖆𝖉𝖚 𝕽𝖆𝖎𝖑𝖜𝖆𝖞 𝕹𝖊𝖜𝖘
இந்திய இரயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன:
🔹 ஆதார் கட்டாயம்!
2025 ஜூலை 1 முதல், IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு ஆதார் உறுதிப்படுத்திய பயனர்களால் மட்டும் முன்பதிவு செய்யலாம்.
2025 ஜூலை 15 முதல், ஆதாருடன் OTP அடிப்படையிலான உறுதிப்பாடு கட்டாயமாகும்.
🔹 ஐ.ஆர்.சி.டி.சி.யும், பயண முகவர்களும் OTP அடிப்படையில்தான் டிக்கெட் வெளியிட முடியும்! அதிகாரபூர்வ PRS கவுன்டர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பயனர் மொபைலுக்கு அனுப்பப்படும் OTPயை உறுதிப்படுத்திய பின்பே தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு வழங்க முடியும்.
இது 2025 ஜூலை 15 முதல் நடைமுறைக்கு வரும்.
🔹 முதற் 30 நிமிடங்கள் முகவர்கள் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய முடியாது! அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், தட்கல் பயணச்சீட்டுகளை அதன் திறப்பு நேரத்திலிருந்து முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
🔸 குளிர்சாதன வகைகளுக்கு: காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை
🔸 சாதாரண வகைகளுக்கு: காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை
இந்த கட்டுப்பாடு நேரடியாக பொதுமக்களுக்கு பயணச்சீட்டு முன்பதிவு கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கவே செய்யப்படுகிறது.