Thevar cabs

Thevar cabs We are the biggest Tour and Travel network in Tamil Nadu. We have wide range of A/C and non A/C Welcome to THEVAR CABS, Coimbatore, India.

providing tour packages, we owe to become the best one-stop agency for all your traveling needs shortly.

18/07/2019
Sathanur Dam, ThiruvannamalaiSathanur Dam, ThiruvannamalaiThe Sathanur Dam is one of the major dams constructed across t...
29/09/2016

Sathanur Dam, Thiruvannamalai
Sathanur Dam, Thiruvannamalai
The Sathanur Dam is one of the major dams constructed across the Pennaiyar River. Sathanur Dam is constructed across the Thenpennai River in Thandarampet taluk among Chennakesava Hills. The dam can be reached by road 30 km (19 mi) from Thiruvannamalai Town. It was constructed in 1958. There is also a large crocodile farm and a fish grotto. Parks are maintained inside the dam for tourists to visit and the gardens have been used by the film industry

The reservoir has a capacity of 7,321,000,000 cu ft (207,300,000 m3) with a full level of 119 ft (36 m). An area of 7,185 ha (17,750 acres) of land is benefited by the left bank canal and 100 ha (250 acres) of land is benefited by the right bank canal in Thandarampet Thiruvannamalai blocks.
One can reach from Lord Arunachala temple by road which takes about half an hour drive by car. Sathanur dam is built across the Pennaiyar River that originates at the Chennakesava hills. A large area of agriculture lands are benefited through water stored in this dam.

The other added attraction of this Sathanur dam is its picturesque location. This nature’s beauty draws millions of tourists every year from all over the world. And people who visit Thiruvannamalai never fail to visit this dam. There is also a beautiful garden and a children’s park as part of this dam. A small zoo is maintained here near this dam with some wildlife varieties.
Sathanur Dam is the oldest hero in Cinema Industry. All the films in midst of 1960-1980 were taken here. Beautiful parks were maintained here with lawns and parks.

One swimming pool is maintained inside the dam to enjoy the tourist during the visit to dam. A large Crocodile farm and a fish grotto is maintained here to know the life of Crocodile and fish culture.
A visit to Sathanur Dam is a useful one to the Engineering students who want to know about the irrigation structures; Sathanur Dam is one of the oldest and beautiful dams here to be visited.

A zoological park of tourist interest is also set up there. People who make a visit to Thiruvannamalai rarely miss Sathanur and Gingee.
For the delight of visitors, bear, porcupine, hare and birds like pigeons are reared here. To attract the children and youngsters Swimming pool, Crocodile park, Flower park, Children's park (with mini-zoo) suspension bridge, Fish farm are also presented here. Colored statues find place and they appear exactly like real men.
A beautiful Botanical garden has been raised on the sheltered lower side of the dam culturing varieties of ornamental plants and their flower adds charm to the spot.

It is very good picnic spot for weekenders as well as those who are visiting Thiruvannamalai. Transport services are available from Thiruvannamalai.

அதிகம் அறியப்படாத பரளிக்காடு                                                                                            ...
06/09/2016

அதிகம் அறியப்படாத பரளிக்காடு
கோவை: கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து கிளை பிரியும் தோலாம்பாளையம் சாலையில் சென்றால் சுமார் 30 கிலோமீட்டர் பசுஞ்சாலைப் பயணத்திற்குப் பின் பில்லூர் அணைக்கட்டைச் சென்றடையலாம். முன் பதிவு குறுகலான மலைப்பாதையில் பயணித்தால் அணைக்கட்டை ஒட்டி இருக்கும் பரளிக்காடு எனும் மலையோர கிராமத்தை சென்றடையலாம். இங்கு வாழும் பழங்குடியினர் நலனுக்காக வனத்துறையே வடிவமைத்தது தான் பரளிக்காடு பசுமைச் சுற்றுலா. இங்கு செல்ல வனத்துறை அலுவலரிடம் தொலைபேசியில் முன் பதிவு செய்ய வேண்டும். விடுமுறை தினங்கள் என்றால் கூட்டம் அதிகம் இருப்பதால் எண்ணிக்கையைப் பற்றி கவலை இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். வார நாட்களெனில் குறைந்தது 40 நபர்கள் கொண்ட குழுவாக இருந்தால் மட்டுமே முன் பதிவு செய்வார்கள். பெரியவருக்கு ரூ.300 குழந்தைகளுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரிசல் பயணம் ஆற்றங்கரையோர ஆலமரங்களில் நீண்ட ஊஞ்சல்கள் கட்டப்பட்டுள்ளன. குளிர் தருக்களின் கீழ் கயிற்றுக் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. சிறார்கள் ஊஞ்சலாடி மகிழ்கிறார்கள். காதலர்களும், தம்பதியர்களும் இதமான சூழலை அனுபவித்த வண்ணம் கயிற்றுக் கட்டில்களில் அமர்ந்து பேசிக் களிக்கிறார்கள். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பரிசல்கள் வந்து சேர்கின்றன. வழிகாட்டி அனைவரையும் உற்சாகமாக கூவி அழைத்து அனைவருக்கும் 'லைஃப் ஜாக்கெட்டுகளை" அணிவிக்கிறார். சிந்தெடிக் பைபர்களினால் ஆன அகன்ற வட்டுக்களில் பயணம் தொடர்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் மட்டும் தண்ணீரன்றி வேறில்லை. பரிசலோட்டி அணைக்கட்டின் வரலாற்றையும், ஆற்று மீன்களின் சுவையையும், மிருகங்கள் தண்ணீர் அருந்தவருவதையும் சொல்லிக்கொண்டே துடுப்பை போடுகிறார். என்னதான் நட்டாற்றில் பயணித்தாலும் வெயில் மண்டையைப் பிளக்கத்தான் செய்கிறது. சுற்றிலும் உயரம் குறைவான மலைகள் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். கிராமத்து உணவுகள் பரிசல் மறுகரையை அடைந்ததும் பயணிகளின் ஆட்டமும் பாட்டமும் ஆரம்பமாகிறது. கொஞ்சம் பெரியவர்கள் வழிகாட்டியின் உதவியோடு குறுக்கும் நெடுக்குமாய் விழுந்து கிடக்கும் மரங்களில் ஏறி இறங்கி வனத்திற்குள் நுழைகிறார்கள். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் மதிய உணவு தயார் என்ற அறிவிப்பு வருகிறது. மீண்டும் பரிசல் ஏறி மறுகரைக்குச் சென்றால் மலைவாழ் மக்களே தயாரித்த சுவையான உணவு வகைகள் காத்திருக்கின்றன. பஃபே சிஸ்டம். நகர்ப்புறத்துக்காரர்களுக்கு கிராமத்து உணவுகளில் பிரியம் இருக்காது என்பதால் மெனுவில் வெஜ் பிரியாணி, சப்பாத்தி, தயிர்சாதம் என சமதர்மம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய மெனுவில் இருந்த கேப்பை களி உருண்டையும், அதற்குத் தொட்டுக்கொள்ள கொடுத்த கீரை கடைசலும் 'கொண்டா கொண்டா" என்றிருந்தது. டிரெக்கிங் சிறிய இளைப்பாறலுக்குப் பின் தொடங்குகிறது டிரெக்கிங். வனத்துறை வழிகாட்டி உதவியுடன் காட்டிற்குள் நடக்கத் துவங்குகிறோம். பரளிக்காடு வனம் அடர் வனம் அல்ல. இலகுவானது. பிரம்மாண்டமான மரங்களோ, முட்புதர்களோ, காட்டுக்கொடிகளோ வழிமறிக்காததால் நடை எளிமையாக இருந்தது. சாகச மனங்களுக்கு சற்று ஏமாற்றம்தான் என்றபோதும் குழந்தை குட்டிகளோடுச் செல்ல மிகவும் ஏற்ற சிக்கல்களில்லாத காட்டுப்பயணம். ஆற்றில் குளியல் பிரயாணத்தின் இறுதிப் பகுதி அத்திக்கடவு ஆற்றில் ஆனந்தக் குளியல். காவியைக் கரைத்த மாதிரி செம்மண் நிறத்தில் கரைபுரண்டு வருகிறது ஆறு. காலம் தப்பி வந்த திடீர் மழையால் ஆற்றில் நல்ல வெள்ளம். படுகை முழுக்க யானை முதுகு போன்ற பிரம்மாண்டமான பாறைகள். நூற்றாண்டு உருளலில் கற்கள் அனைத்தும் தனக்கான தனிப்பொலிவை அடைந்திருக்கின்றன. வீட்டுப்பெண்கள் உருளைக்கற்களை ஆசையோடு சேகரித்துக்கொள்கின்றனர். கிழங்கு மஞ்சள் அரைக்க, பூண்டு நசுக்க, பனங்கற்கண்டு நுணுக்க அருமையான உபகரணம். ஆற்றின் கரையோரத்தில் உயரம் உயரமான மாமரங்கள் தலைகொள்ளாத மாங்காய்களுடன் காய்த்து நிற்கின்றன. மழைச்சகதியில் விழுந்து கிடக்கும் மாம்பிஞ்சுகளைப் பொறுக்கியெடுத்து ஆற்றில் கழுவி உப்புச் சேர்த்து திங்க சுவை அபாரம். நீந்திக் குளிக்க முடிகிற அளவிற்கு ஆழமில்லாத ஆறு. பாறைகள் வேறு அதிகம். ஒரு குத்துப்பாறையினைப் பிடித்துக்கொண்டு உடலை நீட்டிக்கொண்டால் நம்மைக் கழுவிக் கரைக்கும் ஆவேசத்துடன் தழுவிக்கொள்கிறது ஆறு. இறங்கிய ஜனங்களெல்லாம் பாறைகளோடு பாறையாக ஊறிக்கொண்டேதான் இருக்கிறார்கள். கரையேற எவருக்கும் மனமில்லை. மாலைச் சூரியன் மெள்ள மேற்கில் சரிய வழிகாட்டி குரலெழுப்புகிறார். பெண்கள் உடைமாற்ற வசதி இல்லாதது பெரிய குறை. பெரிய மரங்களைத் தேடி ஈர ஆடைகளோடு அலைகிறார்கள். என்னதான் இயற்கையோடு இணைந்த இடம் என்ற போதும் பரளிக்காட்டை ஒரு சுற்றுலாத் தலமென அங்கீகரிக்க மனம் ஒப்பவில்லை. குடும்பத்தோடு காலையில் கிளம்பி மாலையில் வீடு திரும்பிவிட முடிகிற ஒரு பிக்னிக் ஸ்பாட்டாகத்தான் கருத முடியும். சீதோஷ்ணம், வன விலங்குகள் இல்லாமை, அடர்த்தி இல்லாத காடு என்பன அக்கருத்தாக்கத்தின் காரணிகள்.

மும்பை: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். க...
15/11/2013

மும்பை: மகாராஷ்டிராவில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து நிஜாமுதீன் நோக்கி பயணிகள் ரயில் சென்ற கொண்டிருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் கோதி - லக்டாபுரி ஸ்டேஷன்கள் இடையே சென்றபோது ரயிலின் 14 பெட்டிகள் திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர், 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து காரணமாக மும்பை நாசிக் இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொறியாளர்கள் ரயில் பாதையை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம், 1989ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், சென்பகத்தோப...
26/07/2013

ஸ்ரீவில்லிபுத்தூர் சரணாலயம், 1989ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் செயல்பட்டுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், சென்பகத்தோப்பு எனுமிடத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 480 சதுர கி.மீ. இந்த சரணாலயத்தின் முக்கிய நோக்கம் – அழிவில் இருக்கும் பெரிய வகை அணில்களை பாதுகாப்பது.

இந்த சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பெரும்பகுதி விருதுநகர் மாவட்டத்திலும், ஒரு சிறு பகுதி மதுரை மாவட்டத்திலும் உள்ளது.

இந்த சரணாலயம் மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு பலவகையான மரங்கள் மற்றும் செடிகள் இருக்கின்றன. மேலும் இங்கு தனிப்பாறை எனுமிடத்தில் மருத்துவ குணம் வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன.

புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், குரங்கு, பறக்கும் அணில், கரடி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும் இங்கே உள்ளன. இங்கு இருக்கும் பெரிய வகை அணில்களை இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே காணமுடியும். இங்கு இருக்கும் அணில்கள் ஒன்றரை கிலோ எடையுள்ளவை, இவை பெரும்பாலும் புளியையே விரும்பி உண்ணும்.

இங்கு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி இந்த சரணாலயத்தில் தற்போது 200 வகையான மரங்கள், செடிகள் உள்ளன. மேலும் 18 வகையான பாம்புகள், 15 வகையான ஊரும் விலங்குகள், 56 வகையான பட்டாம் பூச்சிகள் உள்ளன.

இந்த சரணாலயத்திற்கு அருகில் பிலவாக்கல் மற்றும் கொய்லார் அணைகள் உள்ளன. மேலும் இதன் அருகில் மீன்வெட்டிப் பாறை அருவியும் உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காகவே பலர் மலைக்குச் செல்கின்றனர்.

எப்படி செல்வது?

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து மூலம் செல்லலாம்.

அருகில் உள்ள ரயில் நிலையம் – மதுரை, 78 கி.மீ தொலைவில்.

அருகில் உள்ள விமான நிலையம் – மதுரை, 78 கி.மீ தொலைவில்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபின்னர் இந்த சரணாலயம் செல்வதற்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தலாம் அல்லது நடந்தே மலை மீது ஏறலாம்.

குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும...
26/07/2013

குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

குற்றால சீசன் காலம்

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம்.

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே “குற்றால சீசன்” என அழைக்கப்படுகிறது.

இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.

மூலிகைகளும், பழவகைகளும்

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி
அமைவிடம் தென்காசி
ஆள்கூறு 8.9217° N 77.2786° E
மொத்த உயரம் 290 அடி

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டகுற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் “ஸ்பா” என்றழைக்கப்படுகிறது.

இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒன்பது அருவிகள்

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

1. பேரருவி – இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி – இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி – பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி – செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி – குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.

7. புலி அருவி – குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி – குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி – இது தேனருவி அருகே அமைந்துள்ளது

அரியலூர்    அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவ...
26/06/2013

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு முன்னணி சிமெண்ட் தொழிற்சாலைகள் இங்குதான் அமைந்துள்ளன.

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கை அரசர்களை வெற்றி கொண்ட சோழபுரம் கங்கை கொண்ட சோழபுரம். வடநாட்டுப் போரில் அடைந்த வெற்றியின் அடையாளம். இங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசர் முதலாம் இராஜேந்திரர். இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர் உட்பட பல அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சிங்கத் தலை கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்கள் இந்தக் கோயிலில் உள்ளன. சோழர்களின் பழமையான சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனிப்பெருமை உண்டு.

ஏலாக்குறிச்சி - அடைக்கலமாதா கோயில்

'தேம்பாவணி' எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம். ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட இந்தக் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார், 1711 இல் ஏலாக்குறிச்சியில் இதை உருவாக்கினார். இங்குள்ள அடைக்கலமாதா சொரூபம் லண்டன் மாநகரில் இருந்து கொண்டு வரப்பட்டது. பெரம்பலூரில் இருந்து 65 கி.மீ. திருச்சியில் இருந்து 80 கி.மீ. சென்னையில் இருந்து 375 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஏலாக்குறிச்சி. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்தத் தெய்வீக சிறப்பு பெற்ற தேவாலயத்தைச் சுற்றுலாத் தலமாக அறிவித்தது. இந்த மாதா கோயிலுக்கு சோழ மன்னன் நிலக்கொடை அளித்ததை அறிவிக்கும் கல்வெட்டு சாசனம் ஏலாக்குறிச்சியின் மற்றுமொரு சிறப்பு. தொலைபேசி - 621715.

ஜெயங்கொண்டம்

நெல்லிமண கிராமம் என்றால் யாருக்கும் புரியாது. ஜெயங்கொண்டம் என்றால் புரிந்துவிடும். இவ்வூரின் இயற்பெயர் இதுதான். இங்குள்ள சிவன் கோயிலின் ஸ்தல விருட்சம் நெல்லிமரம் என்பதால் ஊர்ப் பெயரில் நெல்லியும் சேர்ந்து கொண்டது. தனது தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றுவதற்கு முன்னால் இராஜேந்திர சோழன் ஜெயங்கொண்டம் என்ற பெயரை இந்த ஊருக்கு வைத்தான். கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜெயங்கொண்டம் எல்லோரும் கண்டிப்பாக போய்ப் பார்க்க வேண்டிய சோழர் காலக் கலை நகரம்.

மாளிகை மேடு

இந்த மாளிகை மேடு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ளது. தொல்லியம் துறையின் அகழ்வாய்வுகள் முதலாம் இராஜேந்திர சோழனின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் தொல்லியல் துறை இந்த இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மாமன்னர்கள் கால்பதித்த மாளிகை மேட்டிலும் நம் கால் பதிய வேண்டாமா?

காரைவெட்டி பறவைகள் சரணாலயம்

பறவைகள் எங்கிருந்தால் என்ன? பார்க்கப் பார்க்க அழகுதான். தஞ்சாவூருக்கு வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம். இதன் மொத்தப் பரப்பு 454 ஹெக்டர். காலிமர் பறவைகள் சரணாலயத்துக்கு அடுத்து இந்தச் சரணாலயம்தான் பெரும்பாலான நீர்ப்பறவைகளைக் கவரக் கூடியது என்ற புகழுக்குரியது. ஒவ்வொரு நவம்பர் மாதமும் பறவைகள் இங்கு வருகை தரும். அந்தக் காலங்களில் பறவைகள் நீரில் வண்ண ஓவியங்களாகத் தெரியும். நீர்வண்ண ஓவியங்கள்!

திருமானூர்

திருமான் ஊர் திருமானூர். ஒரு கலைமானுடன் நடராசர் நாட்டியம் ஆடியதாக உள்ளூரில் புராணக் கதை ஒன்றுள்ளது. அதனால் இந்தப் பெயர் வந்ததாக வரலாறு. இராஜராஜ சோழன் பெரம்பலூரிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் வழியில் 20 அடி உயரம் உள்ள ஒரு சிலையைவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. வருடத்தில் சில நாட்கள் சூரியக் கதிர்கள் கோயிலின் கர்ப்பக் கிரகத்தின் உள்ளே விழும். சோழர்கால வரலாற்றின் காலச் சுவடுகள் பதிந்த ஊர் இது. ஒருமுறை பார்த்தால்தான் என்ன குறைந்துவிடப் போகிறது.

திருமழப்பாடி

ஊருக்கொரு புராணக் கதையோ, வாய்மொழிக் கதையோ இருக்கிறது. அப்படியொரு கதை இந்த ஊருக்கும் உண்டு. இங்கு பிரபலமான புராணக்கதை ஒன்று உலவுகிறது. தாளவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் மார்க்கண்டேய முனிவருக்காக மற்றோரு பிரபஞ்ச நடனத்தை வைகாசி மாதம் பௌர்ணமி அன்று அருளுவதாக நடராசர் வாக்கு தந்தாராம். ஏனெனில் சிதம்பரத்தில் நடராசர் ஆடிய ஆதி தாண்டவத்தை காணமுடியவில்லையாம். எனவே இந்த ஊர் திரு-மழ-பாடி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் திருக்குளத்தில் குளித்தால் தொழுநோய் தீரும். பிள்ளை பாக்கியம் கிட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

காமரசவல்லி

தஞ்சை மாவட்டத்தைப் போலவே சோழர் காலத்து பிரமாண்ட எழில் நிறைந்த கோயில்களைக் கொண்டுள்ளது அரியலூர் . இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த ஏராளமான ஆதாரங்கள் இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்டன. இங்கு அப்பர் சுவாமிகள் மேளத்துடன் சாக்கைய கூத்து ஆடிய நிலையில் காணப்படுகிறார்.

கள்ளன் குறிச்சி கோயில்

இவ்வூர் ஒரு சிறு கிராமம். ஆனால் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் பரிச்சயமான கிராமம். இங்குதான் கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அரியலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கள்ளன் குறிச்சி உள்ளது.

மேலப்பழுவூர்

தமிழ்த் துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்துள்ள ஊர் இது. அரியலூர் - திருச்சி சாலையில் அமைந்திருக்கிறது. மேலப்பழுவூருக்கு வரலாற்றில் முக்கிய இடமுண்டு. இந்தப் பகுதியில் தலைவராக ஆட்சி புரிந்துள்ள பழுவேட்டரையரின் தலைமையகமாக விளங்கியுள்ளது. இங்குள்ள குடைவரைக் கோயிலான விஷ்ணு கோயில் மனத்தைக் கவரக் கூடியது. இக்கோயிலில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளியன்று பூஜைகள் நடக்கும்.

26/06/2013

Thiruchendur Located 48 kms from Thirunelveli, this 2000-year old temple is best known for the annual Kanda shasti festival that is celebrated here. At the festival the devotees re-enact the victory of Lord Muruga over Surapadman. Thiruchendur showcases Lord Muruga in a rare form. He is seen holding a string of rudraksha beads instead of his usual spear. cholaiThe reason cited for this change is that he is worshipping Lord Shiva at this temple.

Pazhamudhir Cholai Located close to Madurai, this is yet another temple whose origins date back several hundred years. Nakkirar, Arunagirinathar and Avvaiyar are among the several Tamil saints who have made references to this shrine in their hymns and literary work. Legend has it that Lord Muruga appeared before Avvaiyar in a playful form as a young boy, to test her.

Thirupparankundram Located 8 kms Madurai, this abode of Lord Muruga is noted for its inner sanctum that is cut out of the hard rock. Lord Muruga together with his consort, Deivayanai gazes benevolently at his devotees. The main temple itself is an early cave shrine, but the rest of the structure dates back to the Nayak period.

Palani Located 120 kms from Madurai, this is one of the most hallowed shrines of Lord Murugan. The name Palani is a later coinage. It was Pazhani, which is said to come from two Tamil words Pazham meaning fruit and Nee meaning you. The statement it conveys is You are the fruit (wisdom). There is a story that Lord Shiva and Parvati described Lord Muruga in these words after he had a row with his brother Lord Ganesha. The temple is on top of a hillock and can be reached by a flight of 690 steps.

26/06/2013
District Profile    Courtallam, the 'Spa of the south', is situated at an elevation of about 167m on the Western Ghats i...
26/06/2013

District Profile

Courtallam, the 'Spa of the south', is situated at an elevation of about 167m on the Western Ghats in Tirunelveli District. It is an excellent health resort and it is Famous for its water falls. It has an interesting legend. Devotees believes that Lord Shiva sent saint Agastheya to the south to avoid imbalance due to the over crowding in the mount Kailas on his celestial wedding.

Courtallam temple is dedicated to Lord Thirukutralanathar (Siva). This temple contains many inscriptions about Chola and Pandya Kings. Less than a furlong from here is a small temple called Chitra Sabha. Chitra Sabha (Hall of Pictures) dedicated to Lord Nataraja and decorated with paintings of rural deities and devotees, puranic stories and religious events. The Sabha is one of the five Sabhas, where Lord Nataraja is said to have performed the cosmic dance.

Peraruvi(Main Falls), Chitraruvi(Small Falls), Shenbaga devi Falls, Thenaruvi(Honey Falls), Anitharuvi(Five Falls), Pazhathotta Aruvi, puli Aruvi(tiger Falls), Pazhaya Courtallam(old Falls), palaruvi these are not only a tourist spot but also a famous health resort. Every year June to September we can enjoy the falls season. It contains lot of herbs which are good for the health. Courtallam water has medicinal properties since the water runs through forests of herbs and the water has therapeutic qualities to cure physical ailments. During the falls season thousands of tourists from far and near visit this place.

About City

Courtallam is a well-known bathing place and tourist attraction. Some ofits magnificent waterfalls (there are as many as seven) of the Chittar river are said to have mineral properties. Bathing in these waterfalls is considered good for both mind and body. The best time to visit this health resort is during June-September. Courtallam is 58 Km by road fromTirunelveli and 6 Km from Tenkasi Railway Station. Courtallam has another names like Pithur Kanda Theerthapuram, Mukthiveli, Thirunagaram, Nannagaram,Vasanthaperur and so.

Other Places : Within a distance of 40 to 60 km from Tiruchendur are Tuticorin(port), Tirunelveli (railway junction), Krishnapuram (known for templesculptures) and Tenkasi (temple town).

Places to Visit

It is a big tourist attraction and is visited by young and old alike, because of the herbal medicinal properties the water is believed to contain. The town is noted for its salubrious climate and natural scenery. There are 2 important temples here. One dedicated to Shiva is called as Thirukuttralanathar. The othr temple is dedicated to Lord Muruga (2 Kms from Courtallam).

Another interesting place is Thirumalai - 15 Kms. from Courtallam, where there is a beautiful temple dedicated to Lord Muruga on the ranges of the Western ghats.

Temples

Thirukuttralanatha Swamy Temple

The temple is dedicated to Lord Thirukuttralanathar (Shiva). This temple contains many inscriptions about Chola and Pandya Kings. Less than a furlong from here is a small temple called Chitra Sabha (Hall of Pictures) dedicated to Lord Nataraja and decorated with paintings of rural deities and devotees,puranic stories and religious events. The sabha is one of the five Sabhas where Lord Nataraja performed the cosmic dance.

Lord Thirukuttralanathar temple is surrounded by mountains and rivers which has placed it's name in the famous Thaevaram. The Lord Shiva only called as " Thirukuttralanathar "and the Amman is named as " Kuzhalal VaiMozhi ". This pilgrimage centre has a famous waterfalls in it known as Shivamathungai. This pilgrimage centre got its name since the famous poet "Agathiyar" worshipped here. Also it was well sung by almost all the community poet's. It has many sub-temples in Courtallam and they were maintained by the temple Devasthanam. The temples are as follows

ShenbagaDevi Amman Temple
Koothar Koil
ChithiraSabai
ThirugnanaSambandar Koil (Pillaiyar Koil)
Courtalla NangaiKoil
AdiyaetumParaipanri Madaswamy Koil
AavaranapPillaiyar Koil
NannagaramPillaiyar Koil
ThittaiPillaiyar Koil
PasupathaSastha Koil
PaatapathuSastha Koil
SundaramoorthiKoil

Address

No;1789 Venkatalaxmi Complex, Trichy Main Road, Ramanathapuram
Coimbatore
641045

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 11am - 1pm

Telephone

+914222317887

Alerts

Be the first to know and let us send you an email when Thevar cabs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thevar cabs:

Share

Category