Nagercoil & Tirunelveli Area Buses

Nagercoil & Tirunelveli Area Buses தென் தமிழகப் பேருந்துகளின் தகவல்கள்

For Promotion message 📥 me...
(4)

விதம் விதமாய் வித்தியாசமாய் அப்படின்னு ஒரு நகைக்கடைக்கு விளம்பரம் வருமே, அதுபோல இன்னைக்கு அவ்வளவு ஆம்னி பஸ் கம்பனிகள் வந...
06/09/2026

விதம் விதமாய் வித்தியாசமாய் அப்படின்னு ஒரு நகைக்கடைக்கு விளம்பரம் வருமே, அதுபோல இன்னைக்கு அவ்வளவு ஆம்னி பஸ் கம்பனிகள் வந்துருச்சு நம்ம ஊர்ல... 🚌✨💥

இப்படியே போச்சுனா... பயணம் பண்ணுற மக்களின் எண்ணிக்கையை விட பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் போல இருக்கிறது... 🚌📈 அந்த அளவுக்கு தினசரி குறைந்தது 15, 20 வண்டிகளாவது இயக்கத்திற்கு வருகிறது... 🛣️🔥

மோட்டார் தொழில் நஷ்டம், லாபம் இல்லைனு ஒரு பக்கம் முதலாளிகள் சொன்னாலும் கூட வண்டிக ஒரு பக்கம் இறங்கிட்டே தான் இருக்கு... 🚍⚡

அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட இன்னைக்கும் பழைய ஆம்னி பஸ் கம்பனிகள் இன்னும் தங்கள் இருப்பை ஸ்ட்ராங்கா வைத்திருக்காங்க! 💪🔥 அதுல ஒன்னு தான் இந்த Vignesh TAT...
👍✨

நல்ல ஆபரேட்டர், வந்த காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் மக்கள் மத்தியில் நல்ல பெயரோடு இயங்குகிறது! 👌🚍🏆

இதுபோல உங்களுக்கு தெரிஞ்சு உங்க ஏரியாவுல இன்னைக்கு ஓடுற பழைய ஆம்னி பஸ் கம்பனி பெயரை சொல்லிட்டு போங்க... 👇💬🚌

கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் 05/09/2026  நடந்த சம்பவம்... முழு வீடியோவும் கமெண்ட்டில் உள்ளது...நமது அரசு பேருந்து ஓவர்ட...
06/09/2026

கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் 05/09/2026 நடந்த சம்பவம்... முழு வீடியோவும் கமெண்ட்டில் உள்ளது...

நமது அரசு பேருந்து ஓவர்டேக் செய்து சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த கார் ஒன்று பேருந்தை மறித்து பிரச்சனை செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தைப் பார்த்தாலே தெளிவாகத் தெரியும்—காரின் இடதுபுறம் செல்வதற்கு தாராளமாக இடம் இருக்கிறது. அப்படி இருந்தும், நமது அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்ட வேண்டிய அவசியம் என்ன? அதுவும் பேருந்தை ஓட்டியவர் ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த ஓட்டுநர் (Senior Driver).

இந்தச் சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கேரளா காவல்துறையினர் இந்த சம்பவம் நடந்த இடத்திலுள்ள CCTV கேமரா பதிவுகளைச் உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும். தவறு ஒருவேளை நமது அரசுப் பேருந்து ஓட்டுநர் மீதே இருந்தாலும், காவல்துறையை அழைத்துத்தான் புகார் அளித்திருக்க வேண்டும். அதை விடுத்து, தனிப்பட்ட முறையில் நடுரோட்டில் ஓட்டுநரைத் தரக்குறைவாகத் திட்டுவதற்கு இந்த நபருக்கு யார் உரிமை கொடுத்தது?

தமிழ் கெட்ட வார்த்தை போட்டு திட்டும் அளவுக்கு இந்தப் பையனுக்கு ஏன் இவ்வளவு திமிர்...

கேரள மோட்டார் வாகனத் துறை (Kerala MVD) இதுகுறித்து உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உங்கள் மாநில வாகனங்கள் தமிழகத்திற்குள் வரும்போது எங்கள் மக்கள் யாரும் இதுபோன்ற அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதில்லை.

சமீபகாலமாகச் சிறிய வாகன ஓட்டிகள், பேருந்து மற்றும் லாரி போன்ற பெரிய வாகனங்களை வழிமறித்து இடையூறு செய்வது ஒரு ஃபேஷனாகவே (Trend) மாறிவிட்டது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், பேருந்து ஓட்டுநர்களின் நிம்மதியான பணிக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்தச் செயலுக்கு உடனடியாக ஒரு முடிவு கட்ட வேண்டும்.

எனவே, தமிழகப் போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகத் தலையிட்டு, பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக நின்று, அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.

கூட வந்த வண்டிக எல்லாமே கழிக்கப்பட்டுவிட்டது... SETC-யில்...😢 மற்ற போக்குவரத்து கழகத்துக்கு சில வண்டிகளக் கொடுத்தாங்க......
06/09/2026

கூட வந்த வண்டிக எல்லாமே கழிக்கப்பட்டுவிட்டது... SETC-யில்...😢

மற்ற போக்குவரத்து கழகத்துக்கு சில வண்டிகளக் கொடுத்தாங்க... அதுல கொஞ்சம் வண்டிக மட்டும் ரீபில்ட் (Rebuild) பண்ணுனாங்க. அதுவும் டவுன் பஸ் & புது மஞ்சள் வண்டி...😍🎉🚍

பழைய வண்டிய அதே அல்ட்ரா டீலக்ஸா (Ultra Deluxe) நல்ல முக அமைப்பு மற்றும் நல்ல மெயின்டனன்ஸ் (Maintenance) பண்ணுற இந்த மாதிரி வண்டிகளப் பாக்குறது அரிதாகிவிட்டது...🚍🚍

BS3 வண்டிக... ஒழுங்கா பராமரிச்சா இவன் போற வேகம் அப்படி இருக்கும்...⚡🚍🎉

திருச்சி ↔️ மாதவரம் தடத்தில இயங்குறது...😍😍

PC: Tamil Bro 🤝🙏

கேரளாவுல ஒரு விபத்து செய்தி! நின்னுட்டு இருந்த லாரில அடிச்சு வண்டியில இருந்த 8 பேர் அவுட்! 😭💔அடிச்சது தமிழ்நாட்டு வண்டி,...
06/09/2026

கேரளாவுல ஒரு விபத்து செய்தி!
நின்னுட்டு இருந்த லாரில அடிச்சு வண்டியில இருந்த 8 பேர் அவுட்! 😭💔

அடிச்சது தமிழ்நாட்டு வண்டி, செத்தது எல்லாம் தமிழ்நாட்டு காலேஜ் ஸ்டுடென்ட்ஸ்! 🎓⚡

ஒரு வண்டி எந்த வேகத்துல போய் இருந்தா, முன்னாடி நடுவுல பின்னாடி உக்காந்து இருக்குற எல்லாருமே சாவுற அளவுக்கு ஆகி இருக்க முடியும்? 😱💥

அவ்ளோ வேகம் எதுக்கு? 🤦‍♂️

வண்டியோட குவாளிட்டி சொல்லி பண்ற தப்ப சமாளிக்க வேணாம். ❌🚘

பெத்தவுங்க புள்ளைங்கள வளர்க்க எவ்ளோ பாடு படுறாங்கன்னு நான் ஒரு அப்பாவா யோசிக்கும் போது தான் புரியுது! 👨‍👦💔

கொஞ்சம் ஒழுங்கா தான் வண்டி ஓட்டுங்களேன்யா! 🤦‍♂️

பசங்களுக்கு ஒரு காலத்துல மொபைல், அதுக்கப்புறமா பைக், இப்ப கார்னு பெருமைக்கு வாங்கி குடுத்து, பெத்தவங்க அவங்க நிம்மதியை அவங்களே கெடுத்துக்கிறாங்க... 📱🏍️🚘

அந்த CCTV வீடியோ பார்த்தாலே தெரியுது... அந்த பசங்க போன வேகம் என்ன அப்படினு... 📹🚗💨

அதுவும் புது வண்டி வேற... 4 ஸ்டார் 5 ஸ்டார் வாங்குன வண்டினு வாங்க வேண்டியது... நாம ஒழுங்கா பாதுகாப்பா ஓட்டுனா தான் அந்த வண்டியும் நம்மள பாதுகாப்பா வீட்டுக்கு திருப்பி கூட்டிட்டு வரும்! ⭐️🛡️🏠

அதிவேகம் என்னைக்குமே ஆபத்து தான்... ⚠️⚡

இளரத்தம் கொஞ்சம் அப்படி தான் சூடா இருக்கும்... ஆனால் கஷ்டம் இனி அந்த குடும்பத்துக்கு தான? 😔💔

அதுவும் வீட்ல சொல்லாம போயிருக்காங்க... அடிச்ச வேகத்துல அவங்க எல்லாம் ஒரு நிமிஷத்துல இறந்து போயிட்டாங்க... ⏱️⚡

ஆனால் அந்த பெற்றோர் இனி வாழும் காலமெல்லாம் நரகம் தான? அதுக்கு அவங்களும் ஒரு காரணமாயிட்டாங்க... 👨‍👩‍👧‍👦💔

இந்த ஜெனரேஷன் பசங்களா... கொஞ்சமாவது கவனமா இருங்கடா, நல்லா இருப்பீங்க, புண்ணியமா போகும்... 🙏🏻🚸

சாலை விதிகளை மதிக்காததால் தான் 2 நாள் முன்னாடி 4 மாணவிகள் மரணம்... இருசக்கர வாகனம் பேருந்தின் மீது மோதியதால்... 🏍️🚌💥

இன்னைக்கு 8 பேர் மரணம்... அசாத்தியமான டிரைவிங்னால... 🚗💥🛑

எங்க போனாலும் சாலை விதிகளை மதித்து, கொஞ்சம் பொறுமையா, கவனமா, அதே சமயம் கட்டுப்படுத்த கூடிய வேகத்தில் வண்டிகளை இயக்குங்கள்! 🚦🛑⚠️

வாழ்க்கைங்கிறது ஒரே ஒரு தடவை தான்... அதை ரோட்டுல காட்டுற வேகத்துல தொலைச்சிடாதீங்க! 🛑⏳

நம்ம வேகமா போற ஒவ்வொரு கிலோமீட்டர் வேகமும், நம்ம குடும்பத்தோட நிம்மதியை குறைக்கிற வேகம்னு மறந்துடாதீங்க! 📉👨‍👩‍👧‍👦

நண்பர்களோட சேர்ந்து கார்ல போனா ஜாலி தான்... ஆனா கெத்து காட்டுறேன்னு அக்ஸிலரேட்டரை மிதிக்கிறது வீரமில்லை, விவேகமும் இல்லை! 🚘❌⚡

இரவு நேரப் பயணங்களை முடிந்தவரை தவிருங்கள்... தூக்க கலக்கமும் கண் அயர்வும்தான் பல உயிர்களைப் பறிக்கும் எமனாக மாறுகிறது! 🌙😴⚠️

ஹெல்மெட் போடுறதும் சீட் பெல்ட் மாட்டுறதும் போலீஸ்காரங்க அபராதம் போடுவாங்கன்னு இல்லை... உங்களை நம்பி வீட்ல காத்துட்டிருக்குற உங்க குடும்பத்துக்காக! 🪖🪢❤️

வேகம் தரும் சில நிமிட த்ரில்லை விட, உங்க உயிர் உங்கள் குடும்பத்திற்கு பல மடங்கு மதிப்புமிக்கது! ⏱️❤️🏠

பொதுநலன் கருதி உங்களில் ஒருவன்... ✍️

06/09/2026

அடுத்த தேவை வரை

நீ யாருக்கு எவ்வளவு செய்தாய் என்பது முக்கியமல்ல... அவர்கள் நினைக்கும் போது நீ செய்கிறாயா என்பதே முக்கியம்! இங்கே நன்றிகள் எல்லாம் அடுத்த தேவை வரும் வரை தான்!

🌷இனிய காலை வணக்கம்🌷

இவ்வளவு மலைமாடு மாதிரி Rear Engine Bus & Electric bus வாங்கி, அதுல ஸ்கூட்டர் Horn மாட்டி வச்சிருக்காய்ங்க... 🚌🛵🔊அப்டியே ...
05/09/2026

இவ்வளவு மலைமாடு மாதிரி Rear Engine Bus & Electric bus வாங்கி, அதுல ஸ்கூட்டர் Horn மாட்டி வச்சிருக்காய்ங்க... 🚌🛵🔊

அப்டியே போயிட்டிருக்குறப்ப திடீர்னு பீங் பீங்னு சத்தம் கேட்டதும், "சரி ஸ்கூட்டர்தானே... அப்டி வலது பக்கமா overtake பண்ணி போவாப்புல"னு நெனச்சா... 🤔🛵

திடீர்னு நடுக்கடல்ல boat பக்கத்துல வெளிக்காத்த சுவாசிக்க வர்ர நீலத்திமிங்கலம் மாதிரி, பக்குனு ஷாக்காகுற அளவு சொய்ன்னு உரசுற மாதிரி gigantic-க்கா கடந்து போகுறப்ப பக்குங்கும்! 🐋😱💥

ஏன்யா... ரோட்டுல போற ஒருத்தர் கூடவா இதை இன்னும் உங்க கிட்ட complaint பண்ணாம இருக்காய்ங்க? 🤦‍♂️📢

நீங்க City ரோடுகள்ல bike ஓட்டுறவங்களா இருந்தா, கண்டிப்பா இந்த திகில் அனுபவத்த உணர்ந்திருப்பீங்க! 🏍️🛣️⚡😨

பள்ளி மற்றும் கல்லூரியில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியரின் பெயரை கமென்ட்டில் சொல்லுங்கள்... 🏫🎓✏️நம்ம முன்னேறிட்டோம்...
05/09/2026

பள்ளி மற்றும் கல்லூரியில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியரின் பெயரை கமென்ட்டில் சொல்லுங்கள்... 🏫🎓✏️

நம்ம முன்னேறிட்டோம் அப்படின்னு தெரிஞ்சு பொறாமை படாம சந்தோஷப்படுற ஒரே ஆட்கள் நமது ஆசிரியர்கள் மட்டுமே... 🥹❤️✨

இனிய ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துகள்... 💐👨‍🏫👩‍🏫🎉

குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எஸ் பி ஸ்டாலினுக்கு எதிராக நடக்கும் சதி: முறியடிக்கும் குமரி மக்கள்.😍💐எஸ்ப...
05/09/2026

குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எஸ் பி ஸ்டாலினுக்கு எதிராக நடக்கும் சதி: முறியடிக்கும் குமரி மக்கள்.😍💐

எஸ்பி ஸ்டாலினின் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளால் தற்போது அமைதியாக உள்ள குமரி மாவட்டத்தில் மீண்டும் கனிமவள டாரஸ் லாரிகளால் மரண ஓலங்களை ஏற்படுத்தவும், மாணவ செல்வங்களை போதையில் தள்ளாட விட்டு பணம் சம்பாதிக்க துடிக்கும் மாவட்ட மக்களின் நலனுக்கு விரோதமானவர்களின் தொடர் முயற்சிகளை முறியடித்து மக்களின் பாதுகாப்பிலும் அவர்கள் நலனிலும் முழு கவனம் செலுத்தி வரும் எஸ்பி ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சமூக வலைத்தள வசைபாடியான சவுக்கு சங்கரை ஏவி விட்டு எஸ்பி ஸ்டாலினுக்கு எதிராக மக்கள் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்து வரும் உங்களின் எண்ணம் நிறைவேறாது.

அனைத்து உண்மைகளையும் தெரிந்த குமரி மாவட்ட மக்கள் சவுக்கு சங்கரின் பன்முகத் தன்மையையும் நன்கு அறிந்தே உள்ளனர்.
குமரி மாவட்ட மக்களின் நலனுக்கு எதிராக தீங்கு விளைவிக்க நினைக்கும் சமூக விரோதிகள் தங்களுடைய முயற்சிகளை கைவிட்டு விட்டு மாவட்ட மக்களின் நலனில் அக்கறை காட்டுங்கள்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லை என்றால் எஸ்பி ஸ்டாலினுக்கு எதிராக சமூக வலைதள வசபாடிகளை வைத்து நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் உங்கள் பக்கம் ஒரு நாள் திரும்பும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

இன்று நானும் (Police) எனது அப்பாவும் (TNSTC Conductor) இருவரின் பணியின் போது சந்தித்துக் கொண்ட ஓர் அழகிய தருணம்....😍😍😍தி...
05/09/2026

இன்று நானும் (Police) எனது அப்பாவும் (TNSTC Conductor) இருவரின் பணியின் போது சந்தித்துக் கொண்ட ஓர் அழகிய தருணம்....😍😍😍

திரு. ஆர்.கே. தினேஷ் அவர்களின் முகநூல் பதிவு இது... 📱✍️

தந்தை மகற்காற்றும் உதவி 👨‍👦❤️
திருக்குறள்:

>தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

பொருள்:
ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் மிகப்பெரிய உதவி, கற்றறிந்த சான்றோர் நிறைந்த சபையில் அவன் புகழுடன் முதன்மையாக வீற்றிருக்கும்படி அவனை உருவாக்குவதே ஆகும். 🌟🎓👏

84 நாட்களுக்கு பிறகு நெல்லையில் கனமழை 🎉🌧️🌦️வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது நெல்லை மாநகர் மற்றும் அத...
05/09/2026

84 நாட்களுக்கு பிறகு நெல்லையில் கனமழை 🎉🌧️🌦️

வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகி வந்த நிலையில் தற்போது நெல்லை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மழை பெய்து வருகிறது. 🌧️🌦️💝

84 நாட்களுக்கு பிறகு நெல்லையில் மழை பதிவாகியுள்ளது.😍🌦️🌧️

PC: Manjolaai Selvakumar Bro 🙏 🤝

Address

நாஞ்சில் நாடு
Nagercoil
629001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nagercoil & Tirunelveli Area Buses posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share