Nothern Railway Srilanka

Nothern Railway Srilanka it is a platform that provides the best service to a people

ஸ்மார்ட் (SMART) ஆக மாறும் இரயில்வே சேவை..!CSRP திட்டத்தின் கீழ், ஆன்லைனில் இரயில் பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி ஏற்கனவே ...
28/03/2026

ஸ்மார்ட் (SMART) ஆக மாறும் இரயில்வே சேவை..!
CSRP திட்டத்தின் கீழ், ஆன்லைனில் இரயில் பயணச்சீட்டுகளைப் பெறும் வசதி ஏற்கனவே மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய பயணச்சீட்டு முறை மற்றும் அவற்றைச் சரிபார்க்கத் தேவையான உபகரணங்களுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னோடித் திட்டம்
ஒரு முன்னோடித் திட்டமாக, ஏப்ரல் மாதத்தின் சில நாட்களில் களனிவெளி பாதையில் உள்ள பின்வரும் இரயில் நிலையங்களில் இந்தத் திட்டத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது:
• நாரஹேன்பிட்டிய
• நுகேகொடை
• மாகும்பூர
• ஹோமாகம
• பாதுக்கை
அடுத்தகட்ட நகர்வுகள்
இதன் மூலம் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து, முதலில் இந்தப் பாதையில் உள்ள அனைத்து நிலையங்களுக்கும், பின்னர் ஏனைய பாதைகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
Copied

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் காரணமாக 01/02/2026 முதல் காங்கேசன்துறை முதல் ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் ர...
01/02/2026

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் காரணமாக 01/02/2026 முதல் காங்கேசன்துறை முதல் ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தபட்டுள்ளன.
இன்று முதல் யாழ்ராணி புகையிரதம் மட்டுமே இயக்கப்படும்.

♦️(colombo to யாழ்ப்பாண ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. )

♦️நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓமந்தை முதல் மாஹோ வரையிலான ரயில் பாதைகளில் உள்ள பாலங்கள் திருத்தும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுள்ளன.

17/01/2026

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் காரணமாக 19/01/2026 முதல் யாழ்ப்பாணம் கொழும்பு ரயில் சேவைகளை நிறுத்தப்படுகின்றது

யாழ்ராணி புகையிரத சேவை நாளை முதல் ஆரம்பம்❤️21|12|2025நாளை அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும். நாளை மறுதினம் காங...
20/12/2025

யாழ்ராணி புகையிரத சேவை நாளை முதல் ஆரம்பம்❤️
21|12|2025
நாளை அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும். நாளை மறுதினம் காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையும் ஆரம்பமாகும்.

குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புகையிரதம் இன்று முதல் (07.07.2025) தினமும் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடும்.(📍இப்புகையிரத...
07/07/2025

குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புகையிரதம் இன்று முதல் (07.07.2025) தினமும் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடும்.
(📍இப்புகையிரதம் இதுவரை காலமும் சனி, ஞாயிறு தினங்களில் மட்டுமே சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது)
✅ஆசனப்பதிவுகளை மேற்க்கொள்ள முடியும்.

அமைச்சரவை ஒப்புதலுடன், இலங்கையின் பழைய ரயில் பெட்டிகள் விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும், அவற்றின் இரும்பு எடையின் அடிப்...
03/07/2025

அமைச்சரவை ஒப்புதலுடன், இலங்கையின் பழைய ரயில் பெட்டிகள் விரைவில் விற்பனைக்குக் கிடைக்கும், அவற்றின் இரும்பு எடையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும். ஒரு காலத்தில் நாட்டின் போக்குவரத்து வரலாற்றின் இன்றியமையாத பகுதியாக இருந்த இந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ரயில் பெட்டிகள், இப்போது ஆக்கப்பூர்வமான மறுபயன்பாட்டிற்கான அரிய மற்றும் மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குக இருக்கின்றன.

இந்த முயற்சி பல்வேறு துறைகளில், குறிப்பாக சுற்றுலாவில் புதுமையான வளர்ச்சிக்கான கதவுகளைத் திறக்கிறது. ஹோட்டல் உரிமையாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் இந்தப் பெட்டிகளை பூட்டிக் தங்குமிடங்கள், உணவகங்கள் அல்லது தனித்துவமான கலாச்சார இடங்களாக மாற்றலாம், ஓய்வு பெற்ற ரயில் பெட்டிகளாக புதிய வாழ்க்கையை சுவாசிக்கலாம்.

சுற்றுலாவுக்கு அப்பால், இந்தப் பெட்டிகள் கல்வி, கலை மற்றும் வணிக முயற்சிகளுக்கான திறனையும் வழங்குகின்றன, இது பார்வை உள்ளவர்களுக்கு பல்துறை சொத்தாக அமைகிறது.

புகையிரத நிலைய அதிபர் - தரம் |||சிங்களம்/தமிழ்/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு விடயங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன்...
18/06/2025

புகையிரத நிலைய அதிபர் - தரம் |||

சிங்களம்/தமிழ்/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு விடயங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் க.பொ.த.(சா./த) பரீட்சையில் சித்தியடைந்திருத்திருத்தல் வேண்டும்.

(ii) க.பொ. த. (உ/த) பரீட்சையில் மூன்று விடயங்களில் (03) (பொதுவான பொது பரீட்சை தவிர்ந்த) ஒரே தடவையில் சித்தியடைந்திருந்தல், பழைய விடய சிபாரிசின்கீழ் மூன்று (03) விடயங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.!

உடற்தகுதி-

சகல விண்ணப்பதாரிகளும் இலங்கையின் எப்பிரதேசத்திலும் சேவை புரிவதற்கான சிறந்த உடற் தகுதிகளை பெற்றிருத்தல் வேண்டும்.
பதவியின் கடமைகளை மேற்கொள்ளக் கூடியளவுக்கு போதுமான உடற் தகுதிகளையும் உளத் தகுதியையும் கொண்டிருந்தல் வேண்டும்.

உயரம் 05 அடி 04 அங்குலத்திற்கு குறையாமலும், நெஞ்சளவு 32 அங்குலத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும்.

6/6 அளவு கண்பார்வை சோதனையிலும் சித்தி அடைய வேண்டும்.

வயது: 18 – 30

ஆண் விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

√ Exam: September 2025
√ No. of Vacancies: 106

பரீட்சை வினாத்தாள்கள்
01. மொழித்தேர்ச்சி – 01 மணி 30 நிமிடம்
02. நுண்ணறிவு – 01 மணித்தியாலம்.

இலங்கை புகையிரத நிலையங்களிற்கு இடையே,மத்திய சுற்றாடல் அதிகார  சபையால் நடாத்தப்பட்ட  ,சிறந்த பசுமை புகையிரத நிலையத்திற்கா...
07/06/2025

இலங்கை புகையிரத நிலையங்களிற்கு இடையே,மத்திய சுற்றாடல் அதிகார சபையால் நடாத்தப்பட்ட ,சிறந்த பசுமை புகையிரத நிலையத்திற்கான போட்டியில் புகையிரத நிலையங்கள் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டன.
(முதலாமிடமாக திருகோணமலை, ஆறாமிடமாக பளை , பதினோராவதாக யாழ்ப்பாண புகையிர நிலையங்களும். உப புகையிரத நிலையங்களில் மீசாலை முதலாவதாகவும், இணுவில் ஐந்தாமிடத்தையும் பெற்றுள்ளது.)

01 - திருகோணமலை
02 - உக்குவெல
03 - பாதுக்கை
04 - மாத்தறை
05- இகளகோட்டை
06 - பளை
07 - கடுகஸ்தோட்ட
08 - மாத்தளை
09 - பேரதெனியா
10 - கல்லோயா
11 - யாழ்ப்பாணம்
12 - வட்டகொட

உப புகையிரத நிலையங்கள்
01. மீசாலை
02. தெல்வத்தை
03. இரட்டைபெரியகுளம்
04. சியம்பலங்கமுவ
05. இணுவில்

இவ் வெற்றிக்காக உழைத்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரி, புகையிரத நிலைய ஊழியர்கள் , பயணிகள் மற்றும் உறுதுணையாக செயற்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் ஓய்வு பெறும் அறை இப்போது உங்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.தொல...
06/06/2025

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் ஓய்வு பெறும் அறை இப்போது உங்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.

தொலைபேசியை சார்ஜ் செய்யவும்,
சாப்பிடுவதற்கு வசதியான இருக்கைகள் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த வசதிகளை கவனமாகப் பயன்படுத்துவதும் பாதுகாப்பதும் உங்கள் பொறுப்பு.

இந்திய உதவியுடன் மீள்திருத்தியமைக்கப்பட்ட அனுராதபுரம் தொடக்கம் மாஹோ சந்தி வரையான புகையிரதப்பாதை இன்று இந்தியப்பிரதமர் மோ...
06/04/2025

இந்திய உதவியுடன் மீள்திருத்தியமைக்கப்பட்ட அனுராதபுரம் தொடக்கம் மாஹோ சந்தி வரையான புகையிரதப்பாதை இன்று இந்தியப்பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி அனுரகுமாரதிஷாநாயக்க அவர்களால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
06/04/2025

Address

Jaffna
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nothern Railway Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share